சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை அருகே பாதி எரிந்த நிலையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

    By அருப்புக்கோட்டை  |   Published on : 26th June 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை அருகே பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை காவல்துறையினர் கைப்பற்றினர். 

      கோவிலாங்குளம் கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அப்பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள்  மூலம் தெரியவந்தது. இதையடுத்து கோவிலாங்குளம் கிராம நிர்வாக அலுவலர்  கார்த்திகைச் செல்வி அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி ஆண் சடலத்தைக் கைப்பற்றினர். இறந்த நபர் யார் எனத் தெரியவில்லை. அவருக்கு சுமார் 45 வயது இருக்கக்கூடும். பாதி எரிந்த நிலையில் சடலம் காணப்பட்டது. இதனால், அந்த நபரைக் கொலைசெய்து எரித்து கிணற்றில் வீசியிருக்கலாம் எனத் தெரிகிறது. சடலத்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர். மேலும் இறந்த நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai