சுடச்சுட

  

  குல்லூர்சந்தை அணையில் ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்படுமா?

  By விருதுநகர்  |   Published on : 26th June 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குல்லூர் சந்தை அணையில் படர்ந்துள்ள  ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   விருதுநகர் அருகே உள்ள இந்த அணை அணைக்கு பாவாலி, கருப்பம்பட்டி, செங்குன்றாபுரம், வடமலைக்குறிச்சி மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், கெளசிகா ஆறு வழியாக வந்தடையும். இந்த அணையின் மூலம், குல்லூர்ச்சந்தை, மெட்டுக்குண்டு, கோட்டநத்தம், குப்பாம்பட்டி,அரச குடும்பன்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும்.

   இந்நிலையில், கோடை காலத்தில் அணையில் தேங்கிய தண்ணீரில் ஆகாயத்தாமரைச் செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வழிந்தோட முடியாமல் தடைப்படுகிறது. மேலும் தண்ணீரின் பெரும் பகுதியை ஆகாயத் தாமரை செடிகளே உறிஞ்சி விடுகின்றன. தற்போது, தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து வரத் தொடங்கும். எனவே, அணையின் உள்பகுதியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai