சுடச்சுட

  

  உள்ளாட்சித்  தேர்தலிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: அமைச்சர் பேச்சு

  By சிவகாசி  |   Published on : 26th June 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என ஊரகத் தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    சிவகாசி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி, நாரணாபுரம், சிவகாமிபுரம், பள்ளப்பட்டி, விஜயலட்சுமி காலனி, போஸ் காலனி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட 23 இடங்களில் சனிக்கிழமை வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:  எனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி செயல்படுவேன். கிராமகளில் ஆடு, கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தொடரும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம், அவர் கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.   லட்சுமியாபுரத்தில் முருகலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அமைச்சர் மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். அமைச்சருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai