சுடச்சுட

  

  காவிரி-வைகை நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வருக்கு விருதுநகர் வியாபாரத் தொழில்துறை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வி.வி.யோகன் வெளியிட்ட அறிக்கை: தமிழக நதிகளை இணைக்கத் தேவையான நிதியைப் பெற மத்திய அரசை எதிர்பார்க்காமல், தமிழகத்தில் உள்ள அறக்கட்டளைகள், தொழில் அதிபர்களை அணுகிப் பெற்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் முயற்சி செய்தால் தமிழக மக்களிடமே தேவையான நிதியை பெற முடியும் என நம்புகிறோம். காவிரி-வைகை நதிநீர் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai