சுடச்சுட

  

  ராஜபாளையம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

          ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வான்மதி, முத்துமாணிக்கம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கூட்டத்தில், படிக்க வசதியற்ற குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

      அம்மையப்பபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் அதிகரிப்பதை தடுக்கவும், கிராமங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கிராமக் கடைகளில் குழந்தைகளுக்கு தேவையற்ற சுகாதாரமில்லாத தின்பண்டங்கள் விற்பதை தடை செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai