Enable Javscript for better performance
சிவகாசி பட்டாசு கிட்டங்கியில் தீ- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியல் சனிக்கிழமை பட்டாசு கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.

      சிவகாசி தெய்வானை நகரில் அருணா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில்  திருத்தங்கலைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் பட்டாசுக் கடை மற்றும் பட்டாசு கிட்டங்கி நடத்தி வந்தார். சனிக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், இந்த கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். எனினும் கிட்டங்கியில் பற்றிய தீ, பட்டாசு கடைக்கும் பரவி அங்கிருந்த பட்டாசுகளும் எரிந்து சேதமாயின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் பெறுமான பட்டாசுகள் எரிந்து சேதமானதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai