சுடச்சுட

  

  பட்டாசுத் தொழிலில் விபத்தை தவிர்க்க அதிகாரி யோசனை

  By சிவகாசி  |   Published on : 26th June 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் கவனச் சிதறல் இல்லாமல் வேலை செய்தால் விபத்தினை தவிர்க்கலாம் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் கண்காணிப்புக் குழு கூடுதல் இயக்குநர் கே.மனோகரன் தெரிவித்தார்.

    சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற, தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

    பட்டாசு ஆலைகளில் விபத்தினை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற தொழிற்சாலைகள் போல் இல்லாமல், பட்டாசு ஆலையில் விபத்து என்றால் பதறவேண்டிய நிலை உள்ளது. எனவே பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள் எந்த வேலையைச் செய்ய வேண்டும். எந்த வேலையைச் செய்யக்கூடாது என திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, முழுக் கவனமும் வேலையில்தான் இருக்க வேண்டும். வேலை செய்யும்போது கவனத் சிதறல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் விபத்தினை தவிர்க்கலாம். வேதியியல் பொருள்களை கையாளும் முறைகள் குறித்து தொழிலாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பட்டாசுத் தொழில் நிலைத்து நிற்க அனைவரும் கூட்டாக இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

      தொழிற்சாலை சட்டங்கள் என்ற தலைப்பில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சிதம்பரநாதன் பேசியதாவது: அபாயகரமான தொழில்கள் என 32 தொழில்களை அரசு வகைப்படுத்தியுள்ளது. அதில் பட்டாசுத் தொழில் 24 ஆவதாக உள்ளது. பட்டாசு ஆலைகள் அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்தால் அவர்களது பெயரை பதிவேட்டில் எழுத வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார். தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai