வத்திராயிருப்பு அருகே வாறுகாலில் கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு
By விருதுநகர் | Published on : 26th June 2016 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டி புதூர் கிராமத்தில் வாறுகாலில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆகாசம்பட்டி புதூரில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். இங்குள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் கழிவு நீர் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. அதில், ஏராளமான இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவு நீரை அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வாறுகாலில் தேங்கிய கழிவு நீரை உடனடியாக அகற்றுவதோடு, மாலை நேரங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். மேலும், சேதமடைந்த வாறுகால்களை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.