சுடச்சுட

  

  ராஜபாளையம் அருகேயுள்ள மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நலிவுற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

    எம்.பி.கே. புதுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் பு.அழகாபுரியான் தலைமை வகித்தார். அவர், வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நலிவுற்ற வசந்தம் மகளிர் குழுவிற்கும், நிலா விதவை சுயநிதிக் குழுவிற்கும் தலா ரூ. 10000, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு தலா ரூ. 5000  வழங்கினார். நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவர் மூக்கையா, கிராம உதவி அலுவலர் கண்ணன், சமூக நலப் பயிற்றுநர் பழனியம்மாள், வறுமை ஒழிப்புச் சங்கச் செயலாளர் ரத்னா, பொருளாளர் சரோஜினி உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai