குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு
By சிவகாசி | Published on : 27th June 2016 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்தங்கல், விருதுநகர் சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தினசரி சுமார் 10 டன் குப்பைகள் சேருகிறது. இதனை கொட்ட இடமில்லாமல், விருதுநகர் சாலையோர புறம்போக்கு நிலத்தில் கொட்டுகின்றனர். குப்பைகள் அதிகமாக சேர்ந்தபின் அதற்குத் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை பரவி காற்று மாடுபடுவதோடு, சுகாதாரகேடும் ஏற்படுகிறது.
இது குறித்து திருத்தங்கல் நகர் மன்றத் துணைத் தலைவர் பொன்சக்திவேலிடம் கேட்டபோது, திருத்தங்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஆணைக்குட்டம் கிராமத்தில் 7.20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ 3.25 கோடிநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்கிய பின்னர் தான் அரசு நிதியை விடுவிக்கும். எனவே விருதுநகர் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு சிலர் தீ வைப்பதால் காற்றில் நச்சுப்புகை கலந்து விடுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.