சுடச்சுட

  

  கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை ஜூலை 15 வரை நீட்டிப்பு

  By விருதுநகர்  |   Published on : 27th June 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் து. ஆரோக்கியசுகுமார் தெரிவித்தார்.

  அவர், மேலும் கூறியதாவது: இப்பட்டய பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

  1.7.2016 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, 36 வார காலங்கள் பயிற்சி நடைபெறும். கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியுடன், கணினி பயிற்சி, தங்க நகை பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான மூன்று சான்றிதழ்களும் தனித் தனியே வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், அரசு போக்குவரத்து கழகம் எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரில் நேரடியாக பெற்று கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 04562- 260293, 94860-45666, 97906-75728, 97883-61413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai