சுடச்சுட

  

  கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வுகாண மாஸ்டர் வீவர் சங்கம் வேண்டுகோள்

  By ராஜபாளையம்  |   Published on : 27th June 2016 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னைக்கு செவ்வாய்க்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வுகாணுமாறு மாஸ்டர் வீவர் சங்கத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

  சத்திரப்பட்டி பகுதியில் கடந்த 12 நாள்களாக விசை தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல லட்ச ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் வீவர் சங்கத்தினரும் இணைந்து போராடி வருகின்றனர். 6 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இப் பிரச்னைக்கு தீர்வுகாண, அதிகாரிகள், பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாஸ்டர் வீவர் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai