சுடச்சுட

    

    செங்குன்றாபுரத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

    By விருதுநகர்  |   Published on : 27th June 2016 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அழகாபுரி செல்லும் சாலையில் உள்ள செங்குன்றாபுரத்தில் பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

     விருதுநகர் அழகாபுரி சாலையில் செங்குன்றாபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவமனைக்கு விருதுநகருக்கு தான் வந்து செல்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் விருதுநகரில் படித்து வருகின்றனர்.

    செங்குன்றாபுரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதன் மேற்கூரை மற்றும் பக்க சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    இதனால், பள்ளிக்காக பேருந்துக்கு காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai