சுடச்சுட

  

  விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி

  By விருதுநகர்  |   Published on : 27th June 2016 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள், விளையாட்டு உபகரணங்கள் பெற ஜூலை 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ. அருணா தெரிவித்தார்.

  அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டு தோறும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறது. 2015-16 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம். தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றவர்களுக்கு ரூ. 6,000 மதிப்பிலும், வெள்ளிப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.4,000 மதிப்பிலும், வெண்கலம் பெற்றவர்களுக்கு ரூ. 2,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று, ஜூலை 1 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai