சுடச்சுட

    

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருந்திரி தீப்பிடித்ததில் குழந்தை சாவு: தாய், மகள் படுகாயம்

    By விருதுநகர்  |   Published on : 27th June 2016 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருந்திரி  ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.  பலத்த காயமடைந்த தாய், மகள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    வெம்பக்கோட்டை தாலுகா, தாயில்பட்டி அருகே வி.துரைச்சாமிபுரத்தில் அனுமதியின்றி வீடுகளில் கருந்திரிகள் தயாரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(38) என்பவரது வீட்டில் கருந்திரிகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை முனியசாமி வீட்டில் அவரது மனைவி ராதா(33), மகள்கள் லோகேஸ்வரி(8), அனுஷ்கா(3) ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, கருந்திரியில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதில்  குழந்தை அனுஷ்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த லோகேஸ்வரி, ராதா ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்தை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடரும் விபத்துகள்: 2010 இல் தாயில்பட்டியில் சட்ட விரோத கருந்திரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழிக்கும் பணியில் ஈடுபட்ட போது,  காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் சட்ட விரோத கருந்திரிகளை பறிமுதல் செய்து அழிப்பதில் காவல்துறையினர் முனைப்பு காட்டினர். ஆனால், தற்போது அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai