சுடச்சுட

  

  அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி சங்கிலி பறிப்பு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 28th June 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

  ராஜபாளையம், ஆண்டாள் நகரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். கல்லமநாயக்கன்பட்டியில் தீப்பெட்டி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி வனிதா(40). ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் மாயத்தேவன்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

  ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அட்டைமில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் செல்வார்.

  திங்கள்கிழமை பள்ளிக்கு அச்சம்தவிழ்த்தான் சாலையில் வனிதா சென்றார். அப்போது நரியன்குளம் அருகே பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வனிதா வண்டியில் மோதி அவரை கீழே தள்ளியுள்ளனர். அவர் விழுந்ததும், அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். மீண்டும் திரும்பி வந்து விழுந்து கிடந்த வனிதாவின் பையையையும் பறித்துச் சென்றனர். பையில் வனிதாவின் செல்லிடப்பேசி மற்றும் பணம் ரூ.2200 பணம் இருந்துள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் சுமார் 25 வயதிற்குள்பட்டவர்கள் என்றும், ஒருவர் கைலி சட்டையும், ஒருவர் வெள்ளை வேஷ்டி - சட்டையும் அணிந்திருந்ததாக வனிதா கூறினார்.

  காயமுற்ற வனிதாவை சக ஆசிரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  தொடரும் சம்பவங்கள்:

  வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் இதே சாலையில் பல வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றும் வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இப்பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று வரும் பெண்கள் மத்தியில் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai