கூலித் தொழிலாளி வீட்டில் தீவிபத்து
By ராஜபாளையம் | Published on : 28th June 2016 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராஜபாளையம் அருகே சேத்தூர் ஆதிதிராவிடர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பேச்சியம்மாள், தாய் மாலையம்மாள், தங்கை பேச்சியம்மாள் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் திங்கள்கிழமை அனைவரும் வெளியில் இருந்தபோது, திடீரென தீப்பற்றியது. இதில் வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பீரோ, பொருள்கள் மற்றும் உடைகளில் தீப் பற்றியது.
அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து சேத்தூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.