சுடச்சுட

    

    கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 தொடங்கக் கோரி மனு

    By விருதுநகர்  |   Published on : 28th June 2016 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பிளஸ் 1 தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    விருதுநகரில் அரசு மருத்துவமனை அருகே தனியார் மண்டபத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. 2011-இல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வில்லிபத்திரி அருகே இப்பள்ளிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இங்கு படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 36 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆனால், இவர்கள் தொடர்ந்து மேல்நிலை படிக்க வகுப்புகள் இப்பள்ளியில் இல்லை. மேல்நிலைவகுப்புகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என 10 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மூன்றாவது முறையாக பெற்றோருடன், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai