சுடச்சுட

  

  சிவகாசி விளையாட்டுக் கழகம், விருதுநகர் மாவட்ட கேரம் கழகம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி ஆகியவை இணைந்து ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் போட்டியை நடத்துகின்றன.

  விருதுநகர் மாவட்ட கேரம் கழகத்தலைவர் ஏ.பி.செல்வராஜன் அறிக்கை:

  இப்போட்டியில் 8,10,12,14,18,21 வயதுபிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டி நடைபெறும். இப்போட்டியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

  மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவிலும் போட்டி நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள வருபவர்கள் வயது சான்று கொண்டு வரவேண்டும். தமிழ்நாடு கேரம் கழகத்தின் விதிமுறைகளின் படி போட்டிகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 98438 22890 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai