சுடச்சுட

    

    ஜூலை 13 இல் முதல்வரிடம் மனு அளிக்க மக்கள் நல பணியாளர்கள் சங்கம் முடிவு

    By விருதுநகர்  |   Published on : 28th June 2016 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீண்டும் பணி வழங்க கோரி ஜூலை 13 இல், தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நல செல்லப்பாண்டியன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது: கடந்த 1990 ஜூலை 2 இல் 25 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் தமிழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 1991 ஜூலை 13 முதல் மூன்று முறை அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டோம்.

    இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் இறந்து விட்டனர். தற்போது 13 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறோம். தமிழக முதல்வர், எங்களையும் அவரது குழந்தைகளாக நினைத்து மீண்டும் பணி வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 13 இல் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார் அவர்.

    அப்போது, மாநில பொதுச் செயலாளர் புதியவன், பொருளாளர் ரெங்கராஜ், செயலாளர் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai