சுடச்சுட

  

  தேர்தல் தகராறு வழக்கு: திமுக பிரமுகர் கைது

  By திருப்பத்தூர்,  |   Published on : 28th June 2016 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் தகராறு வழக்கு தொடர்பாக திருக்கோஷ்டியூரில் திமுக மாணவரணி நிர்வாகி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  திருப்பத்தூர் அருகேயுள்ள ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் மகன் ராஜ்குமார் (39). இவர் சிவகங்கை மாவட்ட திமுக மாணவரணித் துணை அமைப்பாளராக உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் பட்டமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக பிரசாரத்தின் போது தகராறில் ஈடுபட்டதாக இவர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி இருந்தது.

  மேலும் பள்ளத்தூர், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி, ஆகிய காவல் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருக்கோஷ்டியூரில் ராஜ்குமாரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தேர்தல் கலவர வழக்குப் பதிவு செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai