சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் வரத்து அதிகரிப்பால் நாவல்பழம் விலை குறைந்துள்ளது.

  ராஜபாளையம் தென்காசி சாலையில் இருந்த பெரும்பாலான நாவல் மரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டன. ஆனி, ஆடி மாதங்களில் இப்பகுதியில் உள்ள நாவல்மரங்களில் அதிகளவில் காய்க்கும். தற்போது ஒருசில பகுதிகளிலேயே நாவல் மரங்கள் உள்ளன. இதனால் உள்ளுர் பழங்கள் வரத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது.

  மாறாக ஆந்திராவில் இருந்து அதிகளவில் நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் கிலோ ரூ.200 ஆக இருந்த ஒரு கிலோ நாவல் பழம் தற்போது ரூ.160 ஆக விலை குறைந்துள்ளது. ரத்தசோகை, தைராய்டு போன்ற பல்வேறு நோய்களை தீர்க்க நாவல்பழம் உகந்ததாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதால் சீசனில் கிடைக்கும் இப்பழத்தை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

   

  அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் அறிவிப்பு

  அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுபவர்கள் இடிபாடு கழிவுகளை தங்களது சொந்தச் செலவில் அப்புறப்படுத்தவேண்டும். பொது இடங்களிலோ, சாலையோரங்களிலோ, குப்பைகளுடனோ கொட்டக்கூடாது. விழா நடத்துவோர் சாப்பிட்ட இலை உள்ளிட்ட குப்பைகளை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக இறைச்சிக் கழிவுகளை தெருக்களில் கொட்டக்கூடாது என நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai