பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
By விருதுநகர் | Published on : 28th June 2016 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அம்மையப்பன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் விஜயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேசிய வங்கிகள் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் ரத்து செய்ய வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பேசினர். இதில் 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.