Enable Javscript for better performance
பள்ளியில் சுத்திகரிக்கப்பட குடிநீர் திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் சுத்திகரிக்கப்பட குடிநீர் திட்டம் தொடக்கம்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 28th June 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சென்னை திருவான்மியூர் அலமேலு மங்கை கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாட்டர் சிஸ்டம் இந்தியா நிறுவனர் என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அறக்கட்டளையின் தலைவர் கிரிஜா ரெங்கராஜன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, பிரதமரின் முன்னாள் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் டி.ராமசாமி சிறப்புரையாற்றினார். மூத்த கல்வியாளர் பத்மாவதி சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.

    அறக்கட்டளையின் நோக்கம் குறித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் டாக்டர் விஜயராகவன் விளக்கவுரையாற்றினார். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெ.வாசுதேவன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன், ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.சுந்தர்ராஜன், மோர்கான் நிறுவன இயக்குநர் ராஜ் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பள்ளியின் தாளாளர் விமலா, மதர்சுப்பீரியர் ரோஸி, தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் ஏற்புரையாற்றினர். அஜிலண்ட் டெக்னாலஜியின் டாக்டர் ஆர்.சுதா நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai