Enable Javscript for better performance
பாதுகாப்புப் பயிற்சியில் ஆர்வம் காட்டாத பட்டாசுத் தொழிலாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்புப் பயிற்சியில் ஆர்வம் காட்டாத பட்டாசுத் தொழிலாளர்கள்

    By சிவகாசி,  |   Published on : 28th June 2016 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாதுகாப்பு பயிற்சிக்கு பட்டாசுத் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

    பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்க தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க தமிழக அரசு ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பயிற்சி வகுப்பைத் தொடங்கியது. பின்னர் பாதுகாப்பு பயிற்சி மையக் கட்டடம் ஆனையூர் ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போதுவரை 22 தொகுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திங்கள்கிழமை 23வது தொகுதி பயிற்சி வகுப்புக்கள் தொடங்கின. இந்த பயிற்சி மையத்தில் இதுவரை 561 ஆலைகளைச் சேர்ந்த 686 போர்மேன்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு மாத காலமும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைக்ககூடாது. கதவை திறந்து வைத்து பணியாற்ற வேண்டும். விபத்து ஏற்பட்டால் ஆலையை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பயிற்சிகள் ஒரு நாள் பயிற்சியில் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 850 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் நேரடியாக சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரை சுமார் 2507 தொழிலாளர்கள் மட்டுமே ஒருநாள் பயிற்சி பெற்று உள்ளனர்.

    இது குறித்து தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (பயிற்சிமையம்) இணை இயக்குநர் ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பயிற்சி மையத்தில் ஆய்வுக் கூடம் உள்ளது. இதில் வேதியியல் பொருளின் தன்மை, வேறு ஒரு வேதிப் பொருளுடன் கலந்தால் ஏற்படும் விளைவுகள், ஆபத்துக்களை எதிர்கொள்ளும் விதம் குறித்த பயிற்சிகளை ஒரு மாதம் போர்மேன்களுக்கு அளித்து வருகிறோம்.

    பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு, பட்டாசு தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கிறோம். ஒருநாள் பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்ப ஆலை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொழிலாளர்களை பயிற்சிக்கு அனுப்பாம் இருந்தால் எப்படி விபத்தினை தடுக்க இயலும். இனியாவது ஆலை உரிமையாளர்கள், அனைத்து தொழிலாளர்களையும் ஒரு நாள் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai