சுடச்சுட

  

  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் இப்பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். அப்போது ஆட்சியர் தெரிவித்தது:

  போதைப்பொருள்களை உபயோகிப்பதன் மூலம், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஹெச்ஐவி தொற்று நோய்கள், இருதயக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

  வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மூலம் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றார்.

  பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

  நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சீனிவாசன், மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் கா.அழகர், செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலர் ஷேக்தாவூது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai