சுடச்சுட

  

  விருதுநகரில் போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  விருதுநகர் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி தொடங்கி வைத்தார். தேசபந்து மைதானத்தில் பேரணியில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, சத்ரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, செந்திக்குமார நாடார் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, போதைப் பொருள்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியானது தெற்குரத வீதி, மேலரத வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று கேவிஎஸ் நடுநிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai