சுடச்சுட

  

  விருதுநகர் அருகே இ. முத்துலிங்காபுரத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தையை தாக்கிய கணவர் மீது மனைவி புகார்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  விருதுநகர் அருகே உள்ள இ.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் நித்யா(36). ஆர்.ஆர்.நகரில் உள்ள அரசு வங்கியில் வணிக தொடர்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெகதீஷ். தனியார் பட்டாசு ஆலை தொழிலாளி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீஷ், அடிக்கடி மது குடித்து விட்டு தகராறு செய்வாராம். கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல மது குடித்து வந்து தகராறில் ஈடுபட்டாராம். மேலும், நித்யா மற்றும் இரு குழந்தைகளை கம்பால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நித்யா சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகார்படி, வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் ஜெகதீஷ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

  கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

  திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் உள்ள முனியசாமிநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்(27). இவர் திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் தனது ஆட்டோவில் வந்தபோது, கருப்பசாமி கோயிலருகே ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி பையில் இருக்கும் பணத்தை எடு என மிரட்டினார்ம்.

  சுரேஷ் கூச்சலிடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் திருத்தங்கல் சிறுவர் பூங்கா தெருவைச் சேர்ந்த பூமாரிமுத்து(42) என தெரியவந்தது. பூமாரிமுத்துவை திருத்தங்கல் போலீஸார் கைது செய்தனர்.

  காய்கறி வியாபாரிகள் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு

  சிவகாசி நகராட்சி அண்ணா காய்கறி சந்தையின் வியாபாரிகள் சங்கத் தலைவரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  சிவகாசி அண்ணா காய்கறி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.ரவி(38). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பு இவரின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருவர் ரவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் ரவியின் கையில் வெட்டு விழுந்தது. இவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மதுரை தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபர்களைத் தேடிவருகின்றனர். அரிவாள் வெட்டு சம்பவத்தைக் கண்டித்து திங்கள்கிழமை தினசரி சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டிருந்தன.

  தீக்காயமடைந்த பெண் சாவு

  விருதுநகர் அருகே எட்டுநாயக்கன்பட்டியில் சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

  விருதுநகர் அருகே எட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி முருகேஸ்வரி, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஞாயிற்றுகிழமை இரவு விறகு அடுப்பில் முருகேஸ்வரி சமையல் செய்தாராம். அப்போது அருகே வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கேன் தவறி கீழே விழுந்ததில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த முருகேஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். கணவர் சக்திவேல் புகார்படி சூலக்கரை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai