சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை

  By ராஜபாளையம்,  |   Published on : 29th June 2016 03:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே கணபதிசுந்தரநாச்சியார்புரத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

  இயந்திரம் மூலம் 4 ஏக்கர் கரும்பு ஒரே நாளில் அறுவடை செய்ய முடியும். இதையே வேலையாள்களை வைத்து அறுவடை செய்தால் ஒரு மாதமாகும்.

  இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.450 முதல் 500 வரை மட்டுமே செலவாகும். ஆள்களை வைத்து அறுவடை செய்தால் ரூ.600 முதல் 700 வரை செலவாகும்.

  ஆனால் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய விரும்பும் விவசாயிகள் நாலரை அடி இடைவெளியில் சமமாக கரும்புகளை நடவு செய்திருக்க வேண்டும் என சர்க்கரை ஆலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

  அரசு அறிவித்தபடி ஒரு டன் கரும்புக்கு ரூ.2800ஐ வழங்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai