Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் சிறப்பு துப்புரவுப் பணி: நகராட்சித் தலைவர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் சிறப்பு துப்புரவுப் பணி: நகராட்சித் தலைவர் வேண்டுகோள்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 29th June 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை நகரில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

      அருப்புக்கோட்டை நகரில் முக்கியச் சாலைகளில் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சிறப்பு துப்புரவுப் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதில், சாலையோரங்களில் உள்ள மண்ணை அள்ளுதல், முக்கியச் சாலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது.

     மேலும், சாலையோரங்களில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுதல், புதிய கட்டடம் கட்ட மணல், செங்கற்களைச் சேமித்து வைத்தல் கூடாது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரெங்கும் உள்ள மழைநீர் சேகரிப்பு ஓடைகள் மற்றும் கழிவுநீர் ஒடைகள் தூர்வாரும் பணியும் நடைபெற இருப்பதால் நகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai