சுடச்சுட

  

  இருக்கன்குடி அணையை பராமரிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

  By சாத்தூர்  |   Published on : 29th June 2016 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     இருக்கன்குடியில் ஓடும் அர்ச்சுனா நதி மற்றும் வைப்பார் ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ. 72 கோடியில் 1991இல் பணிகள் தொடங்கப்பட்டு, 2004இல் அணை கட்டிமுடிக்கப்பட்டு நீர் த்தேக்கபட்டது.

    இருக்கன்குடி அணையில் இருந்து 24 கி.மீ. தொலைவுக்கு 9 கிளை கால்வாய்கள் அமைக்கபட்டுள்ளன. அணையில் நீர் தேக்கி வைக்கும் பட்சத்தில் சாத்தூரை சுற்றியுள்ள 3 கிராமங்களும், தூத்துக்குடி, எட்டையாபுரம் வரை உள்ள 100 வழியோர கிராம விவசாய நிலங்களும் பயன்தரும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட பகுதியில் அணை இருந்தாலும் அதன் பயன்பாடு முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கே சென்றடைகின்றன.

    கடந்த ஆண்டு பருவமழையும் கோடைமழையிலும் பொய்த்து விட்டதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த அணையில் நீர்த் தேக்கியும்,பிரதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்கள் முறையாக பராமரிக்கபடாததால் தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு செல்லாமல் வீணாகிவிட்டதாக தூத்தூக்குடி மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    மேலும், அணையை சுற்றிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் முள்செடிகள் அதிகமாக வளர்ந்தும், கரைப் பகுதியில் கற்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. அணையை முறையாக பராமரிக்காததால் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன.

    எனவே, அணையை பராமரித்து,பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுபணித் துறை அதிகாரிகள் கூறுகையில், விரைவில் அணைய பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai