Enable Javscript for better performance
கத்திரிக்காய் விலை சரிவு எதிரொலி: வத்தலாக மாற்றி விற்கும் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    கத்திரிக்காய் விலை சரிவு எதிரொலி: வத்தலாக மாற்றி விற்கும் விவசாயிகள்

    By ராஜபாளையம்  |   Published on : 29th June 2016 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் விலை குறைந்து விற்கப்படுவதால் நஷ்டப்படாமல் இருக்க விவசாயிகள், கத்தரிக்காயை வத்தலாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.

      தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த சிலநாள்களாக தமிழகம், ஆந்திரத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் வரத்து அதிகரித்து ராஜபாளையம் சந்தையில் கிலோ ரூ.15க்கு விற்றது. இதேபோல் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 10 முதல் 15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த  விலை குறைவு விவசாயிகளை வெகுவாக பாதித்து வருகிறது. ராஜபாளையம் சுற்று கிராமங்களிலும், அருகில் உள்ள நெல்லை மாவட்டத்திலும்  கத்தரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 200 மூட்டைகளில் கத்தரிக்காய் ராஜபாளையம் சந்தைக்கு வருகிறது. விலை குறைவால் கத்தரிக்காய் விற்று தீர்ந்தாலும், விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லை.

      இதனால் விவசாயிகள் சிலர் கத்தரிக்காயை மதிப்பு கூட்டும் விதமாக வத்தலாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இது சிறிய பாக்கெட் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai