சுடச்சுட

  

  சாத்தூர் பகுதியில் வாறுகாலை சுத்தம் செய்ய வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

  By சாத்தூர்  |   Published on : 29th June 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூரில் பகுதியில் வாறுகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர் மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை, தலைவர் டெய்சிராணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், கலந்து கொண்ட உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்கள் வார்டுகளில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், முறையாக குடிநீர் விநோயகம் செய்ய வேண்டும், பள்ளி முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.

    துணை தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், சாத்தூரில் வைப்பாற்று பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், கனரக வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடாக வெள்ளைகரை சாலை பயன்படுத்தபடுகிறது. இதனால் சாலை மிகவும் சேதமைடைந்துள்ளது. மேலும் பாலப் பணி நடைபெறுவதால் அமீர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இருச்ககர வாகனங்களுக்காக மாற்று பாதை வைப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் (பொறுப்பு) மணி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  கூட்டத்தில் உறுப்பினர்கள்  பூமாரிமுத்து, இளங்கோ, முனீஸ், கண்ணன், நகர மேற்பார்வையாளர், சுகாதாரத் துறை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai