சுடச்சுட

  

  தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து சென்ற பெற்றோர்

  By விருதுநகர்  |   Published on : 29th June 2016 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சுழி அருகே ராமசாமிபட்டியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடம் மாற்றம் செய்யக் கோரி,செவ்வாய்க்கிழமை மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் ராமசாமிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சூர்யகலா.

    இவர், மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், முழங்கால் போடச்செய்து தண்டனை வழங்குவதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், நிகழாண்டு பள்ளி தொடங்கிய ஜூன் 1 முதல் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார். இங்கு, ஐந்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதனால் அருகில் உள்ள தமிழ்பாடி அரசுப் பள்ளியில் மாணவர்களை 6ஆம் வகுப்பு சேர்க்க முடியாமல் அலைக் கழிப்பு செய்யப்பட்டனராம்.

    இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை ராமசாமிபட்டி பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை வட்டாட்சியர் சீதாலட்சுமி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர், ஓரிரு நாள்களில் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யப்படுவார் என கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்தனராம். இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மதியம் 1.30 மணிக்கு மேல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai