சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள சோலார் பேனல்கள் மற்றும் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி- கமலி புளியங்குளம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் உள்ளது. இதில், தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சமயகுமார் (34) என்பவர் மேலாளராக பணி புரிந்து வருகிறார். 

     இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சோலார் நிறுவனத்திலிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள சோலார் பேனல்கள் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வயர்கள் திருடப்பட்டிருப்பதை சமயகுமார் கண்டார்.

     இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai