சுடச்சுட

    

    போலி நகை, ஆவணத்தை வைத்து ரூ. 50.55 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது

    By விருதுநகர்  |   Published on : 29th June 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் உள்ள அரசு கிராம வங்கியில் போலி நகை, ஆவணங்கள் மூலம் ரூ.50.55 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

      சங்கரலிங்காபுரத்தில் உள்ள அரசு கிராம வங்கியில், 2014- 2015 ஆம் ஆண்டு மேலாளராக பணிபுரிந்தவர் சோமசுந்தரம் (56).  இதே வங்கியில் வணிக முகவராக பணியாற்றியவர் ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த சரவணக்குமார் (38).  இவருக்கு அரசு மதுக்கடையில் விற்பனையாளர் பணி கிடைத்ததால், இவரது மனைவி வனிதா (35) வணிக முகவர் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

      இந்நிலையில், சோமசுந்தரம், சரவணக்குமார், வனிதா ஆகிய 3 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நில பட்டா தயாரித்து பயிர்கடன், போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 50.55 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.  இதனை தணிக்கையின்போது வங்கி உயரதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தற்போது ஓய்வுபெற்ற வங்கியின் மண்டல மேலாளர் மைதீன் பிச்சை கனி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், சோமசுந்தரம் உள்பட 3 பேரையும் திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai