சுடச்சுட

    

    மூலப்பொருள் ஆராய்ச்சி புதுமைகள் பயிற்சி வகுப்பு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 29th June 2016 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் வேதியியல் துறை சார்பில் மூலப்பொருள்கள் ஆராய்ச்சி புதுமைகள் என்ற ஒருநாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

      மத்திய அரசின் அறிவில் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புக்கு இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் செல்வபழம் வரவேற்றார்.

      இதில், இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் நடராஜன், வேதியியல் நிறம் மற்றும் பொருள், அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

      பதிவாளர் வெ.வாசுதேவன், பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai