சுடச்சுட

    

    ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை

    By ராஜபாளையம்  |   Published on : 29th June 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம்-சங்கரன்கோவில் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில்,களியக்காவிளை,கன்னியாகுமரிக்கு பேருந்து வந்து செல்கின்றன.  சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் முதுகுடி கிராமத்தில் துணை சுகாதாரநிலையம் அருகே  இரு பெரிய பள்ளங்கள் உள்ளன. இதன் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து வரும் கசிவு தண்ணீரை பிடிக்க மக்கள் கூட்டமாக வந்து செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதுவே விபத்துக்கும் காரணமாக அமைக்கிறது.

      சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரும் வாகனங்கள், பள்ளத்தை தவிர்க்க வலதுபுறம் செல்கின்றன. அதேவேளையில் ராஜபாளையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் வேகத்தடுப்பை கடக்கும்போது இரு வாகனங்களும் மோதும் அபாயம் உள்ளது.

      இந்த சாலையை அகலப்படுத்தும்பணி நடைபெற்றாலும் சாலையில் உள்ள பள்ளத்தை தாற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai