Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே மரிய மைக்கேல் என்பவர் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

         விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள புது சூரங்குடியில் ஒரு பிரிவினரும்,  அருகில் உள்ள ஸ்ரீரெங்காபுரத்தில் மற்றொரு பிரிவினரும் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்த மரிய மைக்கேல் (எ) வேங்கையன் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

        இந்நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சீ.சதுரகிரி, மாவட்ட பொருளாளர் முத்து தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai