சுடச்சுட

    

    விருதுநகரில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி

    By விருதுநகர்  |   Published on : 29th June 2016 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

      தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் ஜூன் 27 முதல் ஜூலை 3ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து குடிநீராதாரங்களில் குடிநீர் மாதிரி எடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் பரிசோதனைக் கூடங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

      இத் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவிலான பேரணி அந்தந்த மாவட்ட தலைமையிடங்களில் நடைபெற்றது. புதன்கிழமை வட்டார அளவிலான பேரணி அந்தந்த வட்டார தலைமையிடங்களிலும், வியாழக்கிழமை கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அளவிலான பேரணி அந்தந்த பகுதி தலைமையிடங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   அதன்படி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேசபந்து மைதானத்தை அடைந்தது.

      இப்பேரணியில் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் மணிமாறன், யோகவதி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai