சுடச்சுட

    

    விருதுநகர் அருகே வேன்-கார் மோதல்: 5 பேர் காயம்

    By விருதுநகர்  |   Published on : 29th June 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே திங்கள்கிழமை இரவு வேனும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

      சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் ரவி (35). இவர், சொந்த வேலையாக திருநெல்வேலி சென்று விட்டு தனது நண்பர்களுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். திங்கள்கிழமை இரவு விருதுநகர்- சாத்தூர் நான்குவழி சாலையில் வந்தபோது, வேன் ஒன்று கோவில் புலிகுத்தி விலக்கில் திரும்பியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், வேனின் பின் பகுதியில் மோதியது.

     இதில், காரில் பயணம் செய்த நாங்குநேரியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்(33), திருநெல்வேலியைச் சேர்ந்த மகராஜன்(24), மணிகண்டன் (24), மற்றொரு சண்முகசுந்தரம்(37), வேனில் சென்ற கோவில்புலிகுத்தியைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர்.    

      இவர்கள் அனைவரும் சாத்தூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai