Enable Javscript for better performance
அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

    By விருதுநகர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி அல்லது மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு 56 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேர 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தகுதி உடையவர்கள். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிடப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுவர்.

    விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 4ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடம் வழங்க வேண்டும். அதே போல், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஜூலை 14 ஆம் தேதிக்குள்  சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தினை திரும்ப வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை வழங்கினால் போதுமானது. மேலும், அகதிகள் முகாமில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai