சுடச்சுட

  

  அருப்புக்கோட்டையில் வாரந்தோறும் சாலைத் துப்புரவுப் பணித் திட்டம் தொடக்கம்

  By அருப்புக்கோட்டை  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் வாரந்தோறும் சாலைகளில் சிறப்பு துப்புரவுப் பணி திட்டம் புதன்கிழமை தொடங்கியது. 

  அருப்புக்கோட்டையில் நகர்ப்புற சாலைகளை, சிறப்பு துப்புரவுப் பணித் திட்டம் மூலம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி கொண்டு வரப்பட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் அறிவித்திருந்தார்.

  அதன்படி புதன்கிழமை (ஜூன் 29) முதல் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் முன்னிலையில், தாதன்குளம் பிள்ளையார் கோயில் முன் 100-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் சாலைகளை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலயப் பேருந்து நிறுத்தம் வரையில் உள்ள சாலையில் குவிந்திருந்த குப்பைகளையும்,  மணலையும் துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். இதே போல புதிய பேருந்து நிலையம் முதல் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் ஆலயம் வரையிலான சாலையிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

   இத்திட்டம் குறித்து நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் கூறியதாவது: இப்பணியால் சாலையோர மணல் அள்ளப்படுவதால் விபத்துகள் தடுக்கப்படும். மேலும் நகரும் தூய்மையடையும். அடுத்து மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் உள்ள ஓடைகளைத் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai