சுடச்சுட

    

    கடை உரிமையாளர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

    By சிவகாசி  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இனிப்புக் கடை உரிமையாளரை தாக்கியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இவர் தேவமார் மேட்டுத்தெருவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஒருவர் மீது உரசி விட்டதாம். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த, 5 பேர் கொண்ட கும்பல் அவரை கம்பால் தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai