சுடச்சுட

  

  கொலை மிரட்டல்: காதலர் உள்பட 6 பேர் மீது வழக்கு

  By ராஜபாளையம்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையத்தில் திருமணம் செய்து கொள்ள வரதட்சிணையாக நகை, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் காதலர் உள்பட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டியைச் சேர்ந்த குமரவேல் மகன் கார்த்திக் (26). இதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் அமராவதியை (22) காதலித்து வந்தாராம். இந்நிலையில் அமராவதி, தன்னை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தினாராம். அப்போது திருமணம் செய்ய 30 பவுன் நகை, ரூ.3.5 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாக தர வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக், இவரது தந்தை மற்றும் உறவினர்கள் அமராவதியை தாக்கி கொலை மிரட்டல் விட்டனராம். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமராவதி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அமுதா, கார்த்திக், இவரது தந்தை குமரவேல் மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai