சுடச்சுட

  

  சாத்தூரில் பழுதடைந்த வெள்ளக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தூரில் பிரதான சாலை மற்றும் புறவழிச்சாலைகளை இணைக்கும் பாதையாக சாத்தூர்- வெள்ளக்கரை சாலை உள்ளது. சாத்தூர் பிரதான சாலையில் வைப்பாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் கடந்த ஆண்டு இதன் அருகில் புதிய பாலம் கட்ட, ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே சாத்தூரிலிருந்து பிரதான சாலை வழியாக கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், வெள்ளக்கரை சாலையை மாற்றுப் பாதையாக பயன்படுத்துகின்றன.

  இதனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன் சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவர் இடிந்து, ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவுக்கே பாதை உள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் அல்லது அனைத்து வாகனங்களையும் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் நகராட்சி நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது: இந்த பாதையில் கனரக வாகனங்கள் செல்வதால் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மேலும் சாலை பழுதடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த சாலையை பயன்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக அனுமதி பெறவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலைத் துறையினருக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் நகராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai