சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்ட கேரம் கழகம் மற்றும் சிவகாசி விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

     சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டியை பள்ளி முதல்வர் எஸ்.சித்ராஜெயந்தி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 8, 10, 12, 14, 18, 21 வயதுகுள்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் தாக்கர் விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.சி.கனகசபை, மாவட்ட கேரம் கழகத் துணைத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், சிவகாசி விளையாட்டுக் கழகத் தலைவர் பி.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரவணபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai