சுடச்சுட

    

    சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தப் பகுப்பாய்வு மையம் அமைக்கப்படுமா?

    By சிவகாசி  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்தப் பகுப்பாய்வு மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     இந்த ரத்த வங்கியில் ஆண்டுக்கு 5000 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்படுகிறது. இங்கிருந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் அரசு மருத்துவமனைகள், கல்லமநாயக்கன்பட்டி, உப்புத்தூர், நரிக்குடி, ஜமீன்கொல்லம் கொண்டான், குன்னூர் அரசு அரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ரத்தம் தேவைப்படும் போது பெற்றுக் கொள்கின்றன. ஆண்டுக்கு 5000 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றால் அங்கு ரத்தப் பகுப்பாய்வு மையம் அமைக்கலாம் என மருத்துவத் துறை விதி உள்ளது. எனவே இங்கு ரத்தப் பகுப்பாய்வு மையம் அமைக்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

     இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.பிரகலாதன், ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் டி.அய்யனார் ஆகியோர் கூறியதாவது: தானமாகப் பெறப்படும் ரத்தத்தை ஒருவருக்கு மட்டுமே செலுத்த இயலும். ஆனால் அதில் உள்ள வகைகளை பிரித்தால் பலருக்கு செலுத்த முடியும். மேலும் பிளாஸ்மா தீக்காயம் அடைந்தவர்களுக்கும், பிரசவத்துக்கும் பயன்படுத்தலாம். அதே போல் பிளாஸ்மாவிலிருந்து சில சத்துக்களை பிரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ரத்தத்தை வகை பிரித்த பின்னர் டெங்கு காய்ச்சல் மற்றும் ரத்தக் கசிவு நோய்க்கு பயன்படுத்த முடியும். தட்டை அணுக்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் அகியவற்றை பிரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தப்பகுப்பாய்வு மையம் (ரத்த வகை கண்டறியும் கருவி) அமைக்க வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேம். அது பரிசீலனையில் உள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai