Enable Javscript for better performance
தமிழகத்தில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலிக்க உத்தரவிடக்கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலிக்க உத்தரவிடக்கோரி மனு

    By மதுரை  |   Published on : 30th June 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

      விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வி.விக்னேஷ் ரகுராம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தெலுங்கானா, குஜராத், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

     1 முதல் 200 யூனிட்களுக்கு 3 ரூபாய் 50 பைசாவும், 200 முதல் 500 யூனிட்களுக்கு 4 ரூபாய் 60 பைசாவும், 500 யூனிட்களுக்கு மேல் 6 ரூபாய் 60 பைசாவும் வசூலிக்கப்படுகிறது. இனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சராசரியாக இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் வரை உபயோகிக்கும் ஒரு குடும்பம், ரூ.1380 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்திலும் மாதம் ஒரு முறை மின்கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

      இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai