சுடச்சுட

  

  போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பேரவைக் கூட்டம்

  By விருதுநகர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்க 19ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை  நடைபெற்றது.

  விருதுநகர் என்.வி. நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் எம்.வெள்ளைத்துரை தலைமை வகித்தார். எஸ்.சுவாமிநாதன் கொடியேற்றி வைத்தார். போஸ் வரவேற்றார். சம்மேளனக் குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநிலச் செயலர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலர் பி.என்.தேவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சம்மேளனத் தலைவர் ஏ.சவுந்திரராஜன் நிறைவுரையாற்றினார்.

  புதிய நிர்வாகிகள்: இக்கூட்டத்தில், தலைவராக எம்.வெள்ளைத்துரை, பொதுச் செயலராக ஜி.வேலுச்சாமி, பொருளாளராக ஆர்.அழகர்சாமி ஆகியோர் உள்பட 63 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai